வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தை வரவேற்பதாக இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வக்ஃபு வாரிய சட்டம் பழமைவாய்ந்தது என்பதால், அதில் சட்டத்திருத்தம் மேற்கொள்வதை தாம் வரவேற்பதாக தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் வக்ஃபு வாரிய சட்டத்தில் மாற்றம் தேவை என்று கூறிய அவர், இதற்காக மத்திய அரசு மிகப்பெரிய முயற்சியை முன்னெடுப்பதாக கூறினார்.
நாடு தழுவிய அளவில் ஒரு சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் மட்டுமே வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதால் சட்டத் திருத்தம் ஏற்கக்கூடியதுதான் என்றும் அபூபக்கர் தெளிவுபட கூறினார்.