நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி திரைப்படம் இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நெட்பிளிக்ஸில் வெளியான இத்திரைப்படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமான காட்சிகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்ததால், அத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் Simply South ஓடிடி தளத்தில், அன்னபூரணி திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. சர்ச்சைக்குரிய காட்சிகளை தயாரிப்பாளர்கள் படத்தில் இருந்து நீக்கினால் மட்டுமே இந்தியாவில் இப்படம் வெளியிடப்படும் என Simply South நிறுவனம் தெரிவித்துள்ளது.