கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மதுபோதையில் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பேடறப்பள்ளி கிராமத்தில் வசித்து வந்த வடமாநில இளைஞரான மங்கல் ரவிதாசின் வாடகை வீட்டில், ஒரு நாள் இரவு மட்டும் தங்குவதற்காக 6 பேர் வந்துள்ளனர்.
மதுபோதையில் இருந்த 6 பேரும் மீண்டும் மது அருந்தியுள்ளனர். அப்போது உமேஷ், சந்துரு ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்துரு உள்ளிட்டோர் உமேஷை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் உமேஷ் உயிரிழந்த நிலையில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.