டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து அம்மாநில அமைச்சர் அதிஷி, மேடையில் தேம்பி தேம்பி அழுதார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
டெல்லியில் நடைபெற்ற விழாவின்போது பேசிய அமைச்சர் அதிஷி, இதை மேற்கோள்காட்டி பொய்யான வழக்கில் சிசோடியா அகப்பட்டு சிறை செல்ல நேர்ந்ததாகவும், தற்போது ஜாமீனில் வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் நா தழுதழுத்தவாறு கூறினார்.