தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை சீர்குலைக்க முயன்ற ஐஎஸ் தீவிரவாதி ரிஸ்வான் அலி கைது செய்யப்பட்டார்.
டெல்லி கங்கா பக்ஷ் மார்க் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரை பற்றிய துப்பு கொடுத்தால் 3 லட்ச ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என ஏற்கெனவே தேசிய புலனாய்வு முகமை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.