அடுத்த ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதம் அதிகரிக்கும் என பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.
ஏற்கெனவே நாட்டின் ஜிடிபி அடுத்த ஆண்டில் 7.2 சதவீதம் அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அதை விட 2 அடிப்படை புள்ளிகள் குறைவாகவே ஜிடிபி பதிவாகும் என பாரத ஸ்டேட் வங்கி கணித்துள்ளது.
இதற்கான காரணத்தை தெரிவித்த எஸ்பிஐ, உலக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராகவே இருப்பதாக கூறியுள்ளது.