பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறித்துள்ளது.
பாரீஸில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியாவும், ஸ்பெயினும் மோதின. இதில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியது.
இந்த வெற்றிக்கு குடியரசுதலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அணியின் வீரர்களுக்கு தலா 15 லட்சம் ரூபாயும், உதவியாளர்களுக்கு தலா 7.5 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என இந்திய ஹாக்கி சம்மேளனம் அறிவித்துள்ளது.