ஜம்மு- காஷ்மீரில் குல்காம் மாவட்டம் பலூசா பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம பையால் பீதி நிலவியது.
அதில் வெடிகுண்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்தனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள், மர்ம பையை பரிசோதித்தபோது அதில் வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. அதன்பின்னரே அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியது.