“அதிக பார்வையாளர்களைக் கொண்ட சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ரீல்ஸ் வீடியோவிற்கு இரண்டு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள IIT வளாகத்தில் ZERO ACCIDENT DAY போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர், மேடையில் பேசிய அவர், “பள்ளிகளில் போக்குவரத்து விதிகள் குறித்த பாடத்திட்டங்களை மேம்படுத்த அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம்” என்றார்.