கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப்பேருந்து வயல்வெளியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
கடந்த 1-ம் தேதி சூளகிரி வழியாக புதிய வழிதடத்தில் அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி தொடக்கி வைத்த இந்த பேருந்து சேவைகளில் ஒன்றான 70 எண் கொண்ட பேருந்து பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்ற பேருந்து வயல்வெளியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 20 பயணிகள் பேருந்தில் இருந்த நிலையில் ஒருவருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டது. பேருந்து சேவை தொடங்கி ஒருவாரத்திற்குள் பேருந்து விபத்துக்குள்ளானதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.