தமிழகத்தில் திமுக மிகப்பெரிய பாசிசத்தை பரப்பி வருகிறது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் தோல்வியுற்ற விவகாரத்தில் பிரதமர் மீது அவதூறு பரப்பியதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மகனான சாய் லட்சுமி காந்த் பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வத்தாமன், வினேஷ் போகத் வெளியேற்றப்பட்டதற்கு பிரதமர் தான் காரணம் என்பது போல சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை சாய் லட்சுமிகாந்த் பாரதி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாக கூறினார்.
மேலும் இந்திய இறையாண்மையை சிதைப்பதற்காக திமுக இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றச்சாட்டினார்.