கேரளா மாநிலம் வயநாட்டிற்கு உட்பட்ட நென்மேனி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக அங்குள்ள பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில நாட்களக்கு முன்பு சூரல்மலை, மேப்பாடி மற்றும் முண்டக்கை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 400 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோரை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நென்மேனி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் பீதியடைந்தனர். பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், நென்மேனி மற்றும் அம்பலவயல் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளை அம்பலவாயல் வட்டார வேளாண்மை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து உறுதி செய்துள்ளனர்.
ஏற்கனவே, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது நில அதிர்வு விவகாரம், சுற்றுவட்டார மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.