விருதுநகரில் உள்ள இங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
பேராலி சாலையில் முரளி என்பவருக்கு சொந்தமான அட்டைப்பெட்டிக்கு இங்க் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
சுமார் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிவரும் இந்த தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.