கன்னியாகுமரி மாவட்டம், தாளம்விளை பகுதியில் பொதுவழியை பயன்படுத்த விடாமல் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.
ஊராட்சிக்கு சொந்தமான இந்த பாதையை பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பாதையில் செல்வோர் மீது, பாதையை ஒட்டி வசிக்கும் ஜெயமதி, மகேஷ்வரி ஆகியோர் கழிவுகளை வீசுவதாக கூறப்படுகிறது.
இதனால் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரவேண்டி உள்ளதால், மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.