ஆடி மாத திருவிழாவை ஒட்டி சேலம் குகை மாரியம்மன் கோயிலில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக 10க்கும் மேற்பட்ட அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் மீனாட்சி கல்யாணம், பஞ்சபாண்டவர்கள் வேடம் மற்றும் புராண கதைகளின் கதாபாத்திரங்கள் வேடம் அணிந்த பக்தர்கள் வாகனங்களில் வீதி உலா வந்தனர்.
விழாவின் இறுதியில் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்ட வண்டிகளுக்கு விழாக்குழு சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.