ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பெற்றோர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காரம்புடி நகரில் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறார். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த ரவிக்குமார், 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடன் மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பள்ளிக்கு சென்ற மாணவியின் உறவினர்கள் ரவிக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் ரவிக்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.