பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அர்ஷத் நதீம் ஆகிய இருவரின் தாயாரும் அளித்த பேட்டிகள், சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்று வருகின்றன.
பாரீஸ் ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளி வென்ற நிலையில், பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கம் வென்றார்.
தங்கம் வென்ற நதீமும் தன் மகன் போல தான் என்று நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி கூறினார். இதற்கு பதிலளித்துள்ள அர்ஷத்தின் தாயார், தனது சொந்த மகனைப் பார்ப்பது போலவே நீரஜைப் பார்ப்பதாக கூறியுள்ளார்.