Blinkit செயலியில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மளிகைப் பொருட்களை டெலிவரி செய்யும் செயலியான Blinkit-ல் இனி பத்தே நிமிடங்களில் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பெற முடியுமென அந்நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திந்த்சா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதற்கட்டமாக இந்த சேவை டெல்லி மற்றும் குருகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து நகரங்களுக்கும் இந்த சேவை விரிவுபடுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.