வன்முறையை பரப்புபவர்கள் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என வங்கதேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள பேராசிரியர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்ற பின் அந்நாட்டு மக்களிடம் முதன்முறையாக உரையாற்றிய அவர், நமது 2-வது சுதந்திரத்தை குலைக்க, மாணவர்களின் எழுச்சி மூலம் சதிகாரர்கள் வன்முறையை பரப்பி அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
வன்முறை நமது எதிரி எனவும், அதை விரைவில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், முகம்மது யூனுஸ் கூறினார்.