ஒரு தொடரில் தோற்றதாலேயே உலகம் அழிந்துவிடாது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 – 0 என்ற அளவில் தோல்வி அடைந்தது. இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை கைப்பற்றியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோஹித் ஷர்மா, இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதே முக்கியம் என்று கூறியுள்ளார்.