மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் ஆரவின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே அஜித், த்ரிஷா மற்றும் அர்ஜுனின் போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது ஆரவின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.