ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியானது.
கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் பின்தங்கியது. இப்படத்தின் மூன்றாம் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் நெட்ஃப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.