சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் டீசர் வரும் 12-ம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் அக்டோபர் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இப்படத்தின் டீசர், இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளான வரும் 12-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
500 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில், பாபி தியோல், திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.