அமரன் திரைப்படத்திற்காக டப்பிங் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சாய் பல்லவி அவருக்கு மனைவியாக நடிக்கிறார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்தின் டப்பிங் பணிகள் மும்பையில் நடைபெற்று வரும் நிலையில், நடிகை சாய்பல்லவி ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.