அமீர்கான் தயாரிப்பில் வெளியான ‘laapataa ladies’ திரைப்படம் உச்சநீதிமன்றத்தில் திரையிடப்பட்டது.
பாலின சமத்துவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. உச்சநீதிமன்றத்தின் 75-ம் ஆண்டு விழாவை ஒட்டி, இந்த திரைப்படம் நீதிபதிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் திரையிடப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் சி பிளாக்கில் உள்ள அரங்கில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது.