சென்னை அண்ணாசாலையில் சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
ஆயிரம் விளக்கில் இருந்து பாரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்து அண்ணா சாலை அருகே பழுதாகி நின்றது. நெரிசல் மிகுந்த சாலையில் பேருந்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல்துறையினர், பொதுமக்கள் இணைந்து பேருந்தை தள்ளிச்சென்று ஓரமாக நிறுத்தினர். மேலும், அரசுப் பேருந்துகளை அதிகாரிகள் முறையாக பராமரிக்க வேண்டும் என மென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.