தஞ்சை அருகே வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பெருமாள் சிலையை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 7 பேரை கைது செய்தனர்.
தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டபோது காருக்குள் பெருமாள் சிலை இருப்பது தெரியவந்தது.
அதனை கைபற்றிய போலீசார் சிலை கடத்தலில் ஈடுபட்ட ராஜேந்திரன், ராஜ்குமார், தினேஷ், உள்பட 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தினேஷின் தந்தைக்கு ஆற்றில் தூர்வாரும் பணியின்போது சிலை கிடைத்ததும், அதனை யாரிடமும் தெரிவிக்காமல் வெளிநாட்டில் 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 7 பேரையும் கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.