பெங்களூருவில் திருடுபோன 12 இருசக்கர வாகனங்கள் தமிழக போலீசார் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜே.பி. நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காணாமல் போனது.
இதுகுறித்து வினய்விஜய், இலியாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருடுபோன வாகனங்கள் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த இருவரிடம் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.