ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் மியாசாகியில் ரிக்டர் 7.1 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்து, இந்நிலையில் அங்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஜப்பானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.