இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28-ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 31-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக சிம்லா, குல்லு, ராம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 30 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஏற்கனவே 27 பேரின் உடல்கள் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரது சடலம் நோக்லி பகுதியில் மீட்கப்பட்டது. இதனால் பலி எண்ணிக்கை 28- ஆக உயர்ந்துள்ளது.