கரூரில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் தீயில் எரிந்து சேதமாயின.
ஜவஹர் கடைவீதியில் ராஜேஷ் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல இரவு கடையை அடைத்துவிட்டு ராஜேஷ் சென்ற நிலையில் பூட்டியிருந்த கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.