புதுச்சேரி பெய்த கனமழையின்போது ஓடை நீரில் அடித்த செல்லப்பட்ட இளைஞரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் புதுச்சேரியின் புஸ்ஸி வீதி, கருவடிகுப்பம், பாரதி வீதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஜீவானந்தபுரத்தில் மேடான பகுதியில் இருந்து தாழ்வான பகுதிக்கு அதிகளவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியபோது இருசக்கர வாகனத்தில் சென்ற 3 இளைஞர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் பாலா, சந்துகு ஆகியோர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், அய்யப்பன் என்பவர் அருகில் உள்ள ஓடை வாய்க்காலில் அடித்து செல்லப்பட்டார். இது குறித்து தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வருகினற்னர்.