ராசிபுரம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் குறைவான மாணவர் சேர்க்கை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை கடிந்துக் கொண்டார்.
வெண்ணந்தூர் ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார்.
அங்கன்வாடி மையம் அருகே சுகாதாரமற்ற முறையில் மழைநீர் தேங்கியிருப்பதைக் கண்ட அவர், நிகழ்ச்சி நடக்கும் இடம் இப்படியா இருப்பது என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 15 குழந்தைகள் மட்டும் பயில்வதா என அதிகாரிகளை கடிந்து கொண்டார்.