தமிழகம் போதைப்பொருட்களின் புகலிடமாக மாறி சீரழிந்து வருவதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஹெச்.ராஜா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகத்தில் விஷ சாராய அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதாக சாடினார். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் மூடப்படும் என்று திமுக கூறியதாகவும், ஆனால் மதுக்கடைகளை மூட திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
போதைப் பொருட்களின் புகலிடமாக மாறி தமிழகம் சீரழிந்து வருவதாக கூறிய அவர், மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என கேட்டுக்கொண்டார்.