கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே வயல்வெளியில் பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரெட்டிகுப்பம் கிராமத்தில் மஞ்சுளா என்பவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அங்கு பச்சிளம் குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.
இது குறித்து பெண் அளித்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், பச்சிளம் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வயல்வெளியில் பச்சிளம் குழந்தையை விட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.