மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற நபர் மீது திருப்பதி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பெத்த பட்டியாலா பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பவர், அவரது மனைவி சந்தியாவை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
ராகேஷ் தொடர்ந்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதை அறிந்த முதல் மனைவி, தனது குழந்தையுடன் சென்று தடுத்து நிறுத்தியுள்ளார்.