மாமதுரை விழாவையொட்டி மதுரையில் டபுள் டக்கர் பேருந்தில் பொதுமக்கள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
மதுரையில் கடந்த 8ஆம் தேதி தொடங்கிய மா மதுரை விழா ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் மதுரையின் பாரம்பரியம், கலை, வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
தமுக்கம் மைதானத்தில் உணவு திருவிழா மற்றும் வர்த்தக பொருட்காட்சியும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மகளிர் தொழில் முனைவரால் நடத்தப்படும் பொருட்காட்சி காந்தி மியூசியத்தில் நடைபெறுகின்றன.
பலூன் திருவிழா வைகை கரையோரத்திலும், மதுரை பைபாஸ் சாலையில்
இரண்டடுக்கு பேருந்து பவனியும் நடைபெற்றது. டபுள் டக்கர் பேருந்தில் முன்பதிவு செய்த பொதுமக்கள் முக்கிய நகரங்களில் வலம் வந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு பழங்காநத்தம் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து பெத்தானியாபுரம் வரையிலான வழித்தடத்தில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.