புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஆடி படைப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இரு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 25 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. காயாம்பட்டியில் தொடங்கிய இப்போட்டியில் 6 மற்றும் 9 கிலோ மீட்டர் தூரங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.