சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக வீழ்ச்சியை கண்டுவந்த நிலையில் இன்று சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 445 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 51 ஆயிரத்து 560 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு மாற்றமின்றி 88 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 88 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.