சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம், நசரேத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சின்னத்திரை நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.
சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. சித்ரா பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது நசரேத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நடிகை சித்ரா வழக்கில் நீதிபதி ரேவதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், நடிகை சித்ரா வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் மற்றும் முகாந்திரம் இல்லை எனக்கூறி 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.