வயநாடு நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்களின் கனவுகள் சிதைந்துள்ளதாகவும், அவர்களின் வாழ்வை மீட்டெடுப்பதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிறகு, மறுசீரமைப்பு பணிகள் குறித்த பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த பேரிடரில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்தோருக்கு அரசு துணை நிற்குமென குறிப்பிட்டார்.