தனது திரை வாழ்க்கையில் ‘தங்கலான்; மிகவும் சவாலான படம் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
அந்நியன், பிதாமகன் போன்ற படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்திருந்தாலும், தங்கலான் படத்தில் நடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் விக்ரம் கூறியுள்ளார்.
நூறாண்டுக்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கதை என்பதால், அதை உள்வாங்கி நடிப்பது சவாலாக இருந்ததாகவும், இந்த கதாபாத்திரத்திற்காக 6 மாதங்கள் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.