நடிகர் விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் தெலுங்கில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்த இப்படம், கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது.
இந்த வார இறுதியில் தெலுங்கில் இப்படத்தை மீண்டும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.