ஷேக் ஹசீனா தனது பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்யவில்லை என அவரது மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்கள் ஷேக் ஹசீனாவின் இல்லத்தை நோக்கி வரத் தொடங்கியதால், அவருக்கு ராஜினாமா செய்ய நேரம் கிடைக்கவில்லை எனவும், அரசியலமைப்பின் படி, அவர் தான் வங்கதேசத்தின் பிரதமர் என்றும் சஜீப் வசேத் ஜாய் கூறியுள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டால் அவாமி லீக் கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றும் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத் ஜாய் தெரிவித்துள்ளார்.