நடிகர் விஜயின் ‘GOAT’ திரைப்படம் EPIQ தரத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடப்பட இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது EPIQ-விலும் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.