யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Susan Wojcicki புற்றுநோயால் காலமானார்.
56 வயதான அவர் கடந்த 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார். கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சூசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஒன்பது ஆண்டுகள் யூடியூப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த Susan Wojcicki, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி விலகினார். கூகுள் நிறுவனத்தை கட்டமைப்பதில், முக்கியப் பங்காற்றியவர்களில் Susan Wojcicki குறிப்பிடத்தக்கவர்.