வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
2019-ம் ஆண்டில் சுமார் 6 லட்சத்து 74 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு படிக்க சென்றுள்ள நிலையில், 2024-ம் ஆண்டில் சுமார் 13 லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்துள்ளனர்.
உயர்கல்வியை பொறுத்தவரை இந்திய மாணவர்களின் முதல் தேர்வாக கனடா உள்ளது. அதே போல், வெளிநாடுகளில் மரணமடைந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2024-ம் ஆண்டில் இதுவரை 124 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.