முன்னாள் அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், நட்வர் சிங் ஜியின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் வெளியுறவுக் கொள்கையில் சிறந்த பங்களிப்பை வழங்கியதாக தெரிவித்துள்ளார். தனது அறிவாற்றல் மற்றும் செழுமையான எழுத்துக்காகவும் நட்வர் சிங் அறியப்பட்டார். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ”
முன்னாள் வெளியுறவு அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான கே.நட்வர் சிங் சனிக்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 93. நீண்டகாலமாக உடல் நலக்குறைவு காரணமாக குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார். அவரது இறுதிச் சடங்கு நாளை ஆகஸ்ட் 12ஆம் தேதி லோதி சாலை மயானத்தில் நடைபெறுகிறது.
















