ஹிண்டன்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என செபி தலைவர் மாதபி பூரி புச் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிண்டர்பெர்க் நிறுவனம் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் தலைவர் மாதபி புச்சு மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து அறிக்கை வெளியிட்டது
அதில் அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான புகாரில் தொடர்புடைய நிறுவனங்களில் இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் பங்கு வைத்திருந்ததாக அதிர்ச்சிக்குறிய தகவல் வெளியானது.
இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள மாதபி புச்சு, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.மேலும், முதலீடுகளை தாங்கள் வெளிப்படையாகவே செய்து வருவதாகவும், அது பற்றிய அனைத்து தகவல்களும் பல ஆண்டுகளாக SEBI க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.