வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையைத் தடுத்து நிறுத்தக் கோரி, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகை அருகே விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே வங்கதேசத்தில் கடந்த 1971-இல் நடைபெற்ற இனப் படுகொலையிலிருந்து பாடம் கற்று, இந்துக்களுக்கு எதிரான தாக்குதலை தடுத்து நிறுத்த அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வி.எச்.பி. அமைப்பினர் முழக்கமிட்டனர்.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்ததையடுத்து, இந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.